< Back
மாநில செய்திகள்
பட்டாசு ஆலை விபத்தில் உரிமையாளர் கைது
மாநில செய்திகள்

பட்டாசு ஆலை விபத்தில் உரிமையாளர் கைது

தினத்தந்தி
|
5 Jan 2025 8:53 AM IST

நேற்று ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்

விருதுநகர்,

விருதுநகர் அருகே கோட்டூர் பகுதியில் பட்டாசு ஆலையில் நேற்று ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அப்பைநாயக்கன்பட்டி கிராமத்தில் இயங்கிவரும் பட்டாசு ஆலையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் வெடித்து சிதறியதில் 4 அறைகள் தரைமட்டமாகின.இதையடுத்து அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் பட்டாசு ஆலை உரிமையாளர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது . இந்த நிலையில், பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஆலை உரிமையாளர் சசி பாலனை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்