< Back
தமிழக செய்திகள்
பவானிசாகர் அணையில் இருந்து மேலும் 7 நாட்களுக்கு தண்ணீர் திறக்க உத்தரவு
தமிழக செய்திகள்

பவானிசாகர் அணையில் இருந்து மேலும் 7 நாட்களுக்கு தண்ணீர் திறக்க உத்தரவு

தினத்தந்தி
|
27 Dec 2024 6:40 PM IST

பவானிசாகர் அணையில் இருந்து மேலும் 7 நாட்களுக்கு தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை,

பவானிசாகர் அணையில் இருந்து மேலும் 7 நாட்களுக்கு 1028.16 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"2025-ஆம் ஆண்டின் முதல் போக பாசனத்திற்கு, ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி திட்ட பிரதான கால்வாய் ஒற்றைப்படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மான கால்வாய் இரட்டைப்படை மதகுகளின் 1,03,500 ஏக்கர் பாசன நிலங்களுக்கு 15.08.2024 முதல் 12.12.2024 வரை 120 நாட்களுக்கு 23846.40 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட ஆணையிடப்பட்டுள்ளது.

தலைமைப் பொறியாளர், நீர்வளத்துறை, கோயம்புத்தூர் மண்டலம், கோயம்புத்தூர், அரசாணை எண்.1116, பொதுப்பணித்துறை, நாள் 21.07.1977–இல் தலைமைப் பொறியாளருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையிலும், செயலாளர், பவானி முறை நீர்ப்பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் கோரிக்கை அடிப்படையிலும் 13.12.2024 முதல் 27.12.2024 முடிய 15 நாட்களுக்கு கால நீட்டிப்பு செய்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

தற்போது, 28.12.2024 முதல் 03.01.2025 வரை மேலும், 7 நாட்களுக்கு 1028.16 மில்லியன் கன அடிக்கு மிகாமல் இரண்டாம் காலநீட்டிப்பு செய்து தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால், ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம், கோபி, நம்பியூர், பவானி, பெருந்துறை, ஈரோடு, மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி ஆகிய வட்டங்களிலும், திருப்பூர் மாவட்டத்தில், காங்கேயம் வட்டத்திலும் மற்றும் கரூர் மாவட்டத்தில் அரவகுறிச்சி வட்டத்திலும் உள்ள 1,03,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்