< Back
மாநில செய்திகள்
தமிழகம் முழுவதும் 23-ந்தேதி கிராம சபை கூட்டம் நடத்த உத்தரவு
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 23-ந்தேதி கிராம சபை கூட்டம் நடத்த உத்தரவு

தினத்தந்தி
|
9 Nov 2024 9:13 AM IST

தமிழகம் முழுவதும் 23-ந்தேதி கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் நவம்பர் 1-ந்தேதி கிராம சபை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த இருந்த நிலையில், நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், வரும் 23-ந்தேதி தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், கிராம சபை கூட்டத்தை ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையில் 23-ந்தேதி காலை 11 மணியளவில் நடத்த வேண்டும் என்றும், கிராம மக்கள் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க ஏதுவாக, கூட்டம் நடைபெறும் இடம், நேரத்தை கிராம மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்