< Back
மாநில செய்திகள்
மராட்டியத்தில் சந்தர்ப்பவாத கூட்டணி நிராகரிப்பு: அண்ணாமலை
மாநில செய்திகள்

மராட்டியத்தில் சந்தர்ப்பவாத கூட்டணி நிராகரிப்பு: அண்ணாமலை

தினத்தந்தி
|
23 Nov 2024 5:21 PM IST

மராட்டியத்தில் சந்தர்ப்பவாத கூட்டணியை மக்கள் நிராகரித்து உள்ளனர் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்

சென்னை ,

மராட்டியத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கும் கடந்த 20ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் ஆளும் பாஜக, சிவசேனா ( முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தரப்பு), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் தரப்பு) இணைந்து மகாயுதி கூட்டணியும், காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே தரப்பு) தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் தரப்பு) இணைந்து மகாவிகாஸ் அகாடி கூட்டணியும் களமிறங்கின.ஓரேகட்டமாக நடந்த தேர்தலில் 4 ஆயிரத்து 131 வேட்பாளர்கள் களமிறங்கினர். இதில், 66.05 சதவீத வாக்குகள் பதிவாகின.

இந்த சூழலில் மராட்டிய மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பா.ஜ.க. தலைமையிலான ஆளும் மகாயுதி கூட்டணி பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இதன்படி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணி முன்னிலையில் உள்ளது. மராட்டிய மாநிலத்தில் ஆட்சி அமைக்க தேவைப்படும் பெரும்பான்மைக்கான இடங்கள் 145 ஆகும்.

இந்நிலையில் மகாயுதி கூட்டணி மாநிலத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,

எங்கள் அன்புக்குரிய பிரதமர் மோடி அவர்களுக்கு தமிழக பாஜக சார்பில் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் நல்லாட்சியை வழங்கிய, ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை எடுத்துக்காட்டும் விதமாக இது அமைந்துள்ளது. மராட்டிய மக்களுக்கு நன்றி.

மராட்டியத்தில் சந்தர்ப்பவாத கூட்டணியை மக்கள் நிராகரித்து உள்ளனர். ஊழல், அதிகார ஆசை, பிரித்தாளும் குணமுள்ள கூட்டணியை அதிகாரம் கொண்டு மக்கள் நிராகரித்துள்ளனர்.என தெரிவித்துள்ளார்

மேலும் செய்திகள்