< Back
மாநில செய்திகள்
தி.மலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு 850 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

தி.மலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு 850 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தினத்தந்தி
|
11 Dec 2024 2:04 PM IST

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கும்பகோணம் கோட்டம் சார்பில் 850 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கும்பகோணம்,

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கும்பகோணம் கோட்டம் சார்பில் 850 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்ட நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் கார்த்திகை தீபத் திருநாள் 13-ந்தேதி வெள்ளிக்கிழமை மாலை 06.00 மணிக்கு நடைபெறுகிறது. 15-ந்தேதி பவுர்ணமி கிரிவலம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு 12-ந்தேதி வியாழக்கிழமை முதல் 15-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை வரை அனைத்து பக்தர்கள் மற்றும் பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டத்தின் மூலம் சிறப்பு பேருந்துகள் கும்பகோணம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருச்சி, கரூர், காரைக்குடி, ராமேஸ்வரம், புதுக்கோட்டை மற்றும் கும்பகோணம் கோட்டத்தின் பிற முக்கிய நகரங்களிலிருந்தும் மேற்கண்ட நாட்களில் 850 சிறப்பு பேருந்துகள் பக்தர்கள் வசதிக்காக இயக்கப்பட உள்ளது.

திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக தற்காலிக பேருந்து நிலையங்கள் கீழ்க்கண்டவாறு அமைக்கப்பட்டுள்ளன. மேலும் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து பக்தர்கள் கிரிவலப்பாதை சென்று திரும்பிவருவதற்கு வசதியாக சிற்றுந்துகள் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் தங்களின் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு பயணம் செய்ய ஏதுவாக https://www.tnstc.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் மொபைல் ஆப் மூலமாகவும் முன் பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் பயணிகள் அடர்வு குறையும் வரை தேவைக்கு ஏற்ப பேருந்துகளை இயக்கிடவும், பக்தர்களுக்கு எவ்விதமான அசவுகரியமும் ஏற்படாமல் இருக்க அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்