< Back
மாநில செய்திகள்

சென்னை
மாநில செய்திகள்
சட்டசபையில் சேகர்பாபுவிடம் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி - குலுங்கி சிரித்த எடப்பாடி பழனிசாமி

17 March 2025 2:47 PM IST
மாந்திரீக பூஜை குறித்து ஓ.பன்னீர்செல்வம் குறுக்கிட்டு கேள்வி எழுப்பியபோது எடப்பாடி பழனிசாமி குலுங்கி சிரித்தார்.
தமிழக சட்டசபையில் இன்று நடைபெற்ற விவாதத்தின்போது, திருவாலங்காடு கோவிலில் மாந்திரீக பூஜைக்கு போதிய வசதியில்லை என திருவள்ளூர் எம்.எல்.ஏ. ராஜேந்திரன் பேசினார். அப்போது ஓ.பன்னீர்செல்வம் குறுக்கிட்டு மாந்திரீக பூஜை குறித்து அமைச்சர் சேகர்பாபுவிடம் கேள்வி எழுப்பினார்.
இதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குலுங்கி சிரித்தார். பின்னர் பரிகார பூஜையைத்தான் தவறுதலாக மாந்திரீக பூஜை என சொன்னேன் என்று எம்.எல்.ஏ. ராஜேந்திரன் விளக்கமளித்தார்.
இதையடுத்து, மாந்திரீகம் பற்றி ஓ.பன்னீர்செல்வத்திற்கு தெரியாதது ஒன்றுமில்லை என அமைச்சர் சேகர்பாபு நகைச்சுவையாக பதிலளித்தார். ஆன்மிகவாதியான ஓ.பன்னீர்செல்வம், பல கோவில்களுக்கு சென்று எண்ணங்கள் நிறைவேற வழிபடுபவர் என சேகர்பாபு கூறினார். இந்த விவாதத்தின்போது அவையில் சிரிப்பலை எழுந்தது.