< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ஊட்டி மலை ரெயில் சேவை தற்காலிகமாக ரத்து
|3 Nov 2024 2:39 PM IST
கனமழை காரணமாக ஊட்டி மலை ரெயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மேட்டுப்பாளையம், குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் அதிக மழை பெய்கிறது.
இந்த நிலையில், குன்னூரில் பெய்து வரும் கனமழை காரணமாக ஹில்குரோ அருகே பாறைகள் விழுந்து தண்டவாளம் சேதம் அடைந்துள்ளது. இதனால் ஊட்டி-குன்னூர் இடையிலான மலை ரெயில் சேவை இன்று தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.தண்டவாளத்தில் விழுந்த பாறைகளை அகற்றும் பணியில் ரெயில்வே பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.