< Back
மாநில செய்திகள்
பாஜகவால்தான் திமுகவை தோற்கடிக்க முடியும் - அர்ஜுன் சம்பத்
மாநில செய்திகள்

பாஜகவால்தான் திமுகவை தோற்கடிக்க முடியும் - அர்ஜுன் சம்பத்

தினத்தந்தி
|
29 Nov 2024 2:54 AM IST

வருகிற சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலை நிச்சயம் வெற்றி பெறுவார் என்று அர்ஜுன் சம்பத் கூறினார்.

திருச்சி,

திருச்சி ஸ்ரீரங்கத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழகத்தில் அண்ணாமலைக்கும் மற்ற கட்சிகளுக்கும் இடையேதான் போட்டி. 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பாஜக கட்சியா?, மற்ற கட்சிகளா? என்றுதான் இருக்கும். நாம் தமிழர் கட்சியாலோ, தமிழக வெற்றி கழகத்தாலோ திமுகவை தோற்கடிக்க முடியாது. மத்தியில் ஆளும் பாஜகவால் தான் திமுகவை தோற்கடிக்க முடியும். வருகிற சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலை நிச்சயம் வெற்றி பெறுவார்.

அய்யப்பன் சுவாமி குறித்து பாடிய பாடகி இசைவாணி மீது பல்வேறு இடங்களில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க மறுக்கிறது. கஸ்தூரி, ஓம்கார் பாலாஜியை கைது செய்த போலீசார் இசைவாணியையும் கைது செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்