< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னையில் வெங்காய விலை உயர்வு; கிலோ ரூ.130-க்கு விற்பனை
|7 Nov 2024 9:23 AM IST
வரத்து குறைவு காரணமாக சென்னையில் வெங்காய விலை உயர்ந்துள்ளது.
சென்னை,
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று ரூ.60-க்கு விற்கப்பட்டு வந்த ஒரு கிலோ வெங்காயம், ஒரே நாளில் ரூ.40 உயர்ந்து, இன்று கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. புறநகர் கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.130 வரை விற்பனை செய்யப்படுகிறது. வரத்து குறைந்ததால் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கர்நாடகா, மத்திய பிரதேசம் மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து தினசரி சுமார் 60 வாகனங்களில் 1,300 டன் நாசிக் வெங்காயம் வரும் நிலையில், இன்று 500 டன் மட்டுமே வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம், மற்ற காய்கறிகளின் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.