< Back
மாநில செய்திகள்
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ஜனநாயகத்துக்கு எதிரானது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மாநில செய்திகள்

'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டம் ஜனநாயகத்துக்கு எதிரானது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தினத்தந்தி
|
12 Dec 2024 5:48 PM IST

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சென்னை,

'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்துக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்த முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு சமர்ப்பித்த அறிக்கையை, மத்திய அமைச்சரவை கடந்த செப்., 18ம் தேதி ஒருமனதாக ஏற்றுக்கொண்டது. தொடர்ந்து, 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. நடப்பு கூட்டத்தொடரிலே மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு ஆயத்தமாகி உள்ளது.

இந்த நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;

"ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது நடைமுறைக்கு மாறான ஜனநாயக விரோத நடவடிக்கை. 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டம் மாநிலங்களின் குரல்களை அழித்து கூட்டாட்சித்தன்மையை சிதைத்து ஆட்சியை சீர்குலைக்கும். இந்திய ஜனநாயகத்தின் மீதான இந்த தாக்குதலை முழு பலத்துடன் எதிர்ப்போம்."

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்