'ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது வேடிக்கை, வினோத நிகழ்ச்சி' - சீமான்
|ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது தேச ஒற்றுமையை சீர்குலைக்கும் முயற்சி என சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னை,
'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய மந்திரிசபை கடந்த 12-ந்தேதி ஒப்புதல் அளித்தது. நடப்பு கூட்டத்தொடரிலே மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு ஆயத்தமாகி உள்ளது. அதே சமயம், இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசியபோது, "ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை வேடிக்கை, வினோத நிகழ்ச்சியாக பார்க்கிறேன். இது அடிப்படையில் தேச ஒற்றுமையை சீர்குலைக்கும் முயற்சி. ஒரே நாடு, ஒரே ரேசன் கார்டு, ஒரே கல்விக் கொள்கை என எல்லாம் ஒன்று என்கிறார்கள். ஆனால் காவிரியில் இருந்து எங்களுக்கு தண்ணீர் வராது என்பது எப்படியிருக்கிறது?
ஒரே நாடு என்று சொல்லிவிட்டால் தேசப்பற்று வந்துவிடுமா? தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தலை நடத்தி முடித்தவர்கள், வட மாநிலங்களில் 10 கட்டம், 13 கட்டம் என்று பிரித்து வைத்து தேர்தலை நடத்தியது ஏன்?"
இவ்வாறு சீமான் தெரிவித்தார்.