< Back
மாநில செய்திகள்
அவிநாசியில் லாரி மீது ஆம்னி பஸ் மோதி விபத்து-10 பேர் படுகாயம்
மாநில செய்திகள்

அவிநாசியில் லாரி மீது ஆம்னி பஸ் மோதி விபத்து-10 பேர் படுகாயம்

தினத்தந்தி
|
9 Dec 2024 10:09 AM IST

அவிநாசியில் லாரியின் பின்னால் ஆம்னி பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் 10 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

கோவை,

சென்னையில் இருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஆம்னி பஸ் இன்று அதிகாலை கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது. அவிநாசி புறவழிச்சாலை புதுப்பாளையம் பிரிவு அருகே வரும் போது, கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பஸ் முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் கேரளத்தைச் சேர்ந்த ஷிபு ( வயது 47), பிரகதீஷ் (22), கார்த்திக் ராஜா (18), நித்யா (40), நிர்மலா (63), உமா (59) உள்பட10-க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயம் அடைந்தனர்.காயம் அடைந்தவர்கள் அவிநாசி அரசு மருத்துவமனை, திருப்பூர், கோவை உள்ளிட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர். இந்த விபத்து குறித்து அவிநாசி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்