< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
எழும்பூரில் ரெயில் மோதி முதியவர் உயிரிழப்பு
|10 Nov 2024 11:26 AM IST
ரெயில் வருவதைக் கவனிக்காமல் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது விபத்து ஏற்பட்டது.
சென்னை,
சென்னையில் பரபரப்பாக இயங்கி வரும் எழும்பூர் ரெயில் நிலையத்தை ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், எழும்பூர் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது ரெயிலில் அடிப்பட்டு முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.
கால் துண்டான நிலையில் சடலத்தைக் கைப்பற்றிய போலீசார், முதியவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரெயில் வருவதைக் கவனிக்காமல் தண்டவாளத்தைக் கடக்க முயன்றதே விபத்துக்கான காரணம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.