< Back
மாநில செய்திகள்
மதுரையில் இருந்து சென்னை வந்தபோது விமானத்தில் செல்போனை தவறவிட்ட ஓ.பன்னீர்செல்வம்
மாநில செய்திகள்

மதுரையில் இருந்து சென்னை வந்தபோது விமானத்தில் செல்போனை தவறவிட்ட ஓ.பன்னீர்செல்வம்

தினத்தந்தி
|
12 Nov 2024 9:03 AM IST

முன்னாள் முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் நேற்று விமானத்திலேயே செல்போனை தவற விட்டு சென்றதால் ஏர்போர்ட்டில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை

முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மதுரையிலிருந்து, ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் நேற்று மாலை சென்னைக்கு வந்தார். விமானத்திலிருந்து இறங்கி காரில் அமர்ந்த போது, செல்போனை தவறவிட்டது அவருக்கு நினைவுக்கு வந்தது. உடனே, அதை எடுத்து வாருங்கள் என்று போலீசாரிடம் கூறினார். போலீசார், விமான நிலைய மேலாளரிடம் சென்று தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விமானத்தில், தேடி பார்த்தபோது, அவர் அமர்ந்திருந்த இருக்கையில் செல்போன் இருந்தது. விமான ஊழியர்கள் அந்த செல்போனை எடுத்து, விமான நிலைய மேலாளர் அறையில் ஒப்படைத்தனர்.

ஆனால், விமான நிலைய மேலாளர், உடனடியாக அந்த செல்போனை ஓபிஎஸ்சிடம் கொடுக்க முன்வரவில்லை. விமானத்தில் தவறவிட்ட பொருட்களை, திரும்பப் பெறுவதற்கு சில நடைமுறைகள் உள்ளன. அதன்படிதான் கொடுக்க முடியும் என்று மேலாளர் கூறினார்.

இது குறித்து, ஓ பன்னீர் செல்வத்திடம் தகவல் தெரிவித்த போலீசார், செல்போன் வாங்கி வருவதற்கு சிறிது நேரம் ஆகும், எனவே நீங்கள் காத்திருக்க வேண்டாம்; வீட்டிற்குச் செல்லுங்கள், செல்போனை கொடுத்து அனுப்பி விடுகிறோம் என்று கூறினர். இதையடுத்து ஓபிஎஸ் தனது காரில் வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றார். பின்னர் விமான நிலைய மேலாளர் அறையில், முறையான நடைமுறைகளை முடித்துக்கொண்டு, செல்போனை சுமார் ஒரு மணி நேரத்தில் ஓபிஎஸ் வீட்டிற்கு போலீசார் கொடுத்து அனுப்பினர்.

மேலும் செய்திகள்