< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
நெல்லை-சென்னை 'வந்தே பாரத்' ரெயிலில் 11-ந்தேதி முதல் பெட்டிகள் அதிகரிப்பு
|7 Jan 2025 5:52 PM IST
நெல்லை-சென்னை ‘வந்தே பாரத்’ ரெயிலில் கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன.
சென்னை,
நெல்லை-சென்னை இடையே 8 பெட்டிகளுடன் 'வந்தே பாரத்' ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த ரெயிலில் வரும் 11-ம் தேதி முதல் பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
இதன்படி நெல்லை-சென்னை 'வந்தே பாரத்' ரெயிலில் கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்கப்பட்டு, 16 பெட்டிகள் கொண்ட ரெயிலாக வரும் 11-ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல், திருவனந்தபுரம்-காசர்கோடு 'வந்தே பாரத்' ரெயிலில் கூடுதாக 4 பெட்டிகள் இணைக்கப்பட்டு 20 பெட்டிகள் கொண்ட ரெயிலாக இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.