< Back
மாநில செய்திகள்
பெரியார் நினைவு நாளையொட்டி நன்றி அறிவிப்பு எழுச்சி கூட்டங்கள் - கி.வீரமணி அறிவிப்பு
மாநில செய்திகள்

பெரியார் நினைவு நாளையொட்டி நன்றி அறிவிப்பு எழுச்சி கூட்டங்கள் - கி.வீரமணி அறிவிப்பு

தினத்தந்தி
|
16 Dec 2024 5:13 AM IST

டிசம்பர் வைக்கம் உணர்வு சமத்துவ, சுயமரியாதை புரங்களாக மாறட்டும் என கி.வீரமணி தெரிவித்துள்ளார்

சென்னை,

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சாதி, தீண்டாமை ஒழிந்த மனித சமத்துவமும், சுயமரியாதையும் பூத்துக் குலுங்கிட வைக்கம் வெற்றி விழா தமிழ்நாடு முழுக்க வரும் 24-ந் தேதி (தந்தை பெரியாரின் நினைவு நாள்) முதல் ஒரு வாரம் 100 நன்றி அறிவிப்பு எழுச்சி கூட்டங்களுக்குமேல் நடத்தப்படுகிறது.வைக்கம் சாதி - தீண்டாமை ஒழிப்பு வரலாற்றையும், கருணாநிதி, பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் நிறுவியதையும், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்ற பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றி விட்டு, மகளிர் உள்பட கருவறையில் கடமையாற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்துள்ள நூறாண்டு சமூக நீதி வரலாற்றுப் பாடங்களை மக்களுக்கு விளக்கி, மக்கள் பெருந்திரள் கூட்டங்களாக நாடு முழுவதும் நடத்தப்படும்.

டிசம்பர் வைக்கம் உணர்வு எங்கெங்கும் பரவிட, நாடே சமத்துவ, சுயமரியாதை புரங்களாக மாறட்டும், மாற்றிக்காட்டுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்