< Back
மாநில செய்திகள்
மின்சாரம் தாக்கி உயிரிழந்த எஸ்.ஐ. குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிப்பு
மாநில செய்திகள்

மின்சாரம் தாக்கி உயிரிழந்த எஸ்.ஐ. குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிப்பு

தினத்தந்தி
|
31 Oct 2024 4:58 PM IST

கொடிக்கம்பங்களை அகற்றும்போது, மின்சாரம் தாக்கி எஸ்.ஐ. சரவணன் உயிரிழந்தார்.

சென்னை,

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த எஸ்.ஐ. குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியினை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகர காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக (எஸ்.ஐ.) பணிபுரிந்துவந்த சரவணன் (வயது 36) த/பெ.வேலு என்பவர் இன்று 31.10.2024 அதிகாலை சுமார் 1.00 மணியளவில் பரமக்குடி நகரில் இரவு நேர ரோந்துப் பணியின்போது கீழே விழுந்த இருப்புக் கம்பத்தை அகற்றும்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

உதவி ஆய்வாளர் சரவணன் மறைவு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

உதவி ஆய்வாளர் சரவணன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவருடன் பணியாற்றும் காவல் துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு இருபத்தைந்து லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்