< Back
மாநில செய்திகள்
மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளி உயிரிழப்பு - மதுரவாயலில் அதிர்ச்சி
மாநில செய்திகள்

மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளி உயிரிழப்பு - மதுரவாயலில் அதிர்ச்சி

தினத்தந்தி
|
1 Dec 2024 4:34 PM IST

மதுரவாயலில் மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளி உயிரிழந்தார்.

சென்னை,

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த இளைஞர் புலேஸ்வர் (24). இவர் சென்னை மதுரவாயலை அடுத்த வானகரத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி கட்டடம் ஒன்றில் கடந்த மூன்று மாதமாக தங்கி கட்டட தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று கனமழை பெய்ததால் கட்டட வளாகத்தில் தண்ணீர் தேங்கியது. அதனை புலேஸ்வர் அகற்றுவதற்காக உயர் அழுத்த மின் மோட்டாரை ஆன் செய்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்தில் புலேஸ்வர் துடிதுடித்து விழுந்தார். இதனை கண்ட சக தொழிலாளர்கள் மின் இணைப்பை துண்டித்துவிட்டு, உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் புலேஸ்வரை பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து வட மாநில தொழிலாளியின் உடலை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் மழை நீரை அகற்ற சென்றபோது மின்சாரம் தாக்கி வட மாநில கட்டிட தொழிலாளி உயிரிழந்த மதுரவாயல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்