< Back
மாநில செய்திகள்
தமிழகத்தில் கூட்டணி இல்லாமல் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது - செல்வப்பெருந்தகை
மாநில செய்திகள்

'தமிழகத்தில் கூட்டணி இல்லாமல் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது' - செல்வப்பெருந்தகை

தினத்தந்தி
|
24 Nov 2024 6:01 PM IST

தமிழகத்தில் கூட்டணி இல்லாமல் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் எந்த கட்சியும் தனியாக நின்று ஆட்சி அமைக்க முடியாத சூழல்தான் இருக்கிறது என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"2006-ம் ஆண்டு கலைஞர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால் தி.மு.க.வுக்கு தனி மெஜாரிட்டி இல்லை. அந்த சமயத்தில், தமிழகத்திற்கு கருணாநிதியின் ஆட்சி தேவை என்றும், பெருந்தலைவர் காமராஜர் போல் தமிழக மக்களுக்கு கருணாநிதி பல நல்ல திட்டங்களை கொடுப்பார் என்றும் கருதி, தார்மீக அடிப்படையில் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தி.மு.க.வுக்கு ஆதரவு வழங்கினார்.

தமிழகத்தில் கூட்டணி இல்லாமல் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது. ஒரு கட்சி பல தொகுதிகளில் வெற்றி பெறலாம், ஆனால் தனித்து நின்று முழு மெஜாரிட்டியை பெற்று ஆட்சி அமைக்க முடியுமா? என்றால் அது கேள்விக்குறிதான். தமிழ்நாட்டில் இருக்கும் அரசியல் நிலையை பார்க்கும்போது, யாரும் இங்கு தனியாக நின்று ஆட்சி அமைக்க முடியாத சூழல்தான் இருக்கிறது."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்