< Back
தமிழக செய்திகள்
ஈரோட்டில் எந்த அமைச்சரும் தேர்தல் பணி செய்யவில்லை: அமைச்சர் முத்துசாமி
தமிழக செய்திகள்

ஈரோட்டில் எந்த அமைச்சரும் தேர்தல் பணி செய்யவில்லை: அமைச்சர் முத்துசாமி

தினத்தந்தி
|
28 Jan 2025 11:21 AM IST

ஈரோட்டில் எந்த அமைச்சரும் தேர்தல் பணி செய்யவில்லை என்று அமைச்சர் முத்துசாமி கூறினார்.

ஈரோடு,

ஈரோட்டில் வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் நடந்து சென்று மக்களை சந்திப்பது என முடிவு செய்து மொத்தம் 33 வார்டுகளில், 30 வார்டு மக்களை சந்தித்துள்ளோம். மக்கள் பிரச்சினைகளை தெரிந்து கொண்டு நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்த தேர்தலில் வெளியூர் அமைச்சர்கள் வேண்டாம், உள்ளூர் கட்சிக்காரர்களை வைத்து வேலை செய்ய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்; அதனால் நாங்கள் வேலை செய்து வருகிறோம்.

மற்ற அமைச்சர்கள் ஈரோடு கிழக்கு தொகுதிக்குள் வரப்போவதில்லை. எந்த அமைச்சரும் ஈரோடு கிழக்கு தொகுதியில் தங்கி தேர்தல் பணி செய்யவில்லை. இந்தியா கூட்டணி சரியாது அப்படியே இருக்கும். சீமான் மட்டுமல்ல யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை. அனைவரையும் நியாயமான மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம்.

வாக்கு கேட்பது மட்டும் முக்கிய நோக்கமல்ல, மக்களின் பிரச்சினையை கேட்பது மிக முக்கியம். அரசு கொண்டு வரும் ஒவ்வொரு திட்டமும் தேர்தலுக்காகவும், அரசியலுக்காக என நினைத்தால் அப்படித்தான் இருக்கும். அதனை ஆராய்ந்து பார்த்தால் தான் தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்