< Back
மாநில செய்திகள்
அதானியுடன் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லையென வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்
மாநில செய்திகள்

அதானியுடன் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லையென வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்

தினத்தந்தி
|
22 Nov 2024 10:35 AM IST

அதானியுடன் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லையென வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அதானி குழுமத்திற்கும், தமிழக அரசுக்கும் இடையே கடந்த 3 ஆண்டுகளில் எந்த ஒப்பந்தமும் செய்யப்படவில்லை. மின்வாரியம் தொடர்பாக எந்தவித ஒப்பந்தமும் மேற்கொள்ளவில்லை சமூக ஊடகங்களில் தவறான தகவல் பரவி வருகிறது. இது தொடர்பாக என்னிடம் நேரடியாகவோ அல்லது மின்துறை அதிகாரிகளுடனோ கேட்டு தெரிந்துகொண்ட பிறகே பதிவிட வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி சொல்கிறார்.

இதுபோன்ற ஊழல் குற்றச்சாட்டை மறைத்தாலும், இதன் உண்மை நிலை என்ன என்பதை தமிழக அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். அதுமட்டுமல்லாமல் நீதியரசர்களும் தாமாக முன்வந்து இந்த ஊழல் குற்றச்சாட்டை ஆய்வு செய்து, உண்மையில் ஊழல் நடந்திருக்கிறதா என்பதை கண்டறிய வேண்டும்.

அமெரிக்கா நீதிமன்றம் அதானி குழுமத்தின் மீது குற்றம்சாட்டி இருக்கிறார்கள் என்றால் நெருப்பில்லாமல் புகையாது என்கின்ற பழமொழிக்கு ஏற்ப, புகாரும், ஊழல் குற்றச்சாட்டும் வரவேண்டியதன் அவசியம் என்ன? என்பது மக்கள் கேள்வியாக உள்ளது. எனவே தமிழக அரசு உடனடியாக இதற்கான விளக்கத்தை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்