'பா.ம.க.வினர் போராட்டம்; கருத்து சொல்ல விரும்பவில்லை' - திருமாவளவன்
|பா.ம.க.வினர் போராட்டம் தொடர்பாக கருத்து சொல்ல விரும்பவில்லை என வி.சி.க. தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சமீபத்தில் அதானி விவகாரம் குறித்து பா.ம.க நிறுவனர் ராமதாஸ் எழுப்பிய கேள்வி குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, "அவருக்கு வேற வேலையில்லை. அதனால்தான் தினமும் ஒரு அறிக்கை வெளியிட்டு கொண்டிருக்கிறார்" என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். இதற்கு அன்புமணி ராமதாஸ், தமிழிசை சவுந்தரராஜன், சீமான், அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி பா.ம.க.வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், "இது தொடர்பாக நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. இந்த விவகாரத்தை அரசு பார்த்துக்கொள்ளும், முதல்-அமைச்சர் கவனித்துக் கொள்வார்" என்று தெரிவித்தார்.