< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
நீலகிரி: குன்னூர் தாலுகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
|4 Nov 2024 6:55 AM IST
கனமழை எதிரொலியாக குன்னூர் தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி,
இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது. அதிலும் தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்துள்ளது.
இதன்படி கோவை, நீலகிரி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வட கிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், பர்லியாறு, கோவை மாவட்டம் கல்லாறு, மேட்டுப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் பல இடங்களில் மண் சரிவும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கனமழை காரணமாக குன்னூர் தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.