< Back
மாநில செய்திகள்
மின்சாரம் தாக்கி புது மாப்பிள்ளை உயிரிழப்பு

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

மின்சாரம் தாக்கி புது மாப்பிள்ளை உயிரிழப்பு

தினத்தந்தி
|
22 Oct 2024 6:42 AM IST

மின்விசிறியை சரிசெய்தபோது மின்சாரம் தாக்கி புது மாப்பிள்ளை உயிரிழந்தார்.

கோவை,

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மலையடிவார பகுதியை சேர்ந்தவர் தர்னேஷ் (வயது 23). இவர் கடந்த 6 மாதத்துக்கு முன்பு ஸ்ரீமதி (20 வயது) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். கணவன்-மனைவி இருவரும் கோவை அருகே உள்ள ஜி.என்.மில்ஸ் பகுதியில் தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்தனர்.

இந்த நிலையில் தர்னேஷ் குடியிருந்து வரும் வீட்டில் மின்விசிறி திடீரென்று பழுதானது. அதை அவர் சரிசெய்து கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட தர்னேஷ் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்