< Back
மாநில செய்திகள்

திருப்பூர்
மாநில செய்திகள்
திருப்பூரில் புதிய சட்டக் கல்லூரி: நிதி நிலைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ரகுபதி

21 March 2025 10:44 AM IST
திருப்பூரில் புதிய சட்டக் கல்லூரி அமைக்கும் செயற்குறிப்பு அரசின் பரிசீலனையில் உள்ளதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
சென்னை,
தமிழக சட்டசபையில் இன்றைய கேள்வி நேரத்தின்போது, திருப்பூரில் புதிய சட்டக் கல்லூரி அமைக்கும் செயற்குறிப்பு அரசிடம் உள்ளதா? என்று சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் ரகுபதி, திருப்பூரில் புதிய சட்டக் கல்லூரி அமைக்கும் செயற்குறிப்பு அரசின் பரிசீலனையில் உள்ளது. நிதி நிலைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் அளித்தார்.