< Back
மாநில செய்திகள்

கோப்புப்படம்
மாநில செய்திகள்
நெல்லை: மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி

30 Jan 2025 8:53 AM IST
மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்தனர்.
நெல்லை,
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவியில் ஆண்டுதோறும் தண்ணீர் விழுவது வழக்கம். இதனால் இந்த அருவிக்கு நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெய்த திடீர் மழையால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கடந்த 15-ந் தேதி முதல் மணிமுத்தாறு அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். தற்போது மணிமுத்தாறு அணைக்கு வரும் நீரின் வரத்து சீராக உள்ளதால் மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்தனர்.