நெல்லை: சேரன்மகாதேவியில் சட்டக்கல்லூரி மாணவர் கத்தியால் குத்திக் கொலை
|முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
நெல்லை,
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி, கீழ நடுத்தெருவை சேர்ந்தவர் மணிகண்டன்(22). சென்னையிலுள்ள தனியார் சட்டக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்குமுன் விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்தார்.
இந்நிலையில் இன்று காலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த அவரை, கமிட்டி நடுநிலைப்பள்ளி அருகே ஒருவர் வழிமறித்து கத்தியால் குத்தினார். இதில் பலத்த காயமடைந்த மணிகண்டனை உறவினர்கள் மீட்டு சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
இது தொடர்பாக சேரன்மகாதேவி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக மணிகண்டனை சேரன்மகாதேவியை சேர்ந்த மாயாண்டி என்பவர் கொலை செய்தது தெரியவந்தது. ஒரே நாளில் இரண்டு பேர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நெல்லையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.