< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
நெல்லை காரையார் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 12 அடி உயர்வு
|15 Dec 2024 2:43 PM IST
நெல்லை காரையார் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 12 அடி உயர்ந்துள்ளது.
நெல்லை,
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்தது. இதனால் அணைகளுக்கான நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் உயரத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் 143 அடி உயரம் கொண்ட காரையார் அணையின் நீர்மட்டம், இன்று காலை நிலவரப்படி ஒரே நாளில் சுமார் 12 அடி உயர்ந்து 96.8 அடியை எட்டியுள்ளது.
அணைக்கான நீர்வரத்து 3,983 கன அடியாக உள்ளது. இதேபோல், 118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 96.84 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கான நீர்வரத்து 4,913 கன அடியாக உள்ளது. அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பரவலான மழை பெய்து வருவதால், இரு அணைகளின் நீர்மட்டமும் விரைவில் 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.