< Back
மாநில செய்திகள்
தமிழ்நாட்டின் கல்வி கட்டமைப்பை அழிக்கக் கூடியது நீட் தேர்வு - சபாநாயகர் அப்பாவு
மாநில செய்திகள்

தமிழ்நாட்டின் கல்வி கட்டமைப்பை அழிக்கக் கூடியது நீட் தேர்வு - சபாநாயகர் அப்பாவு

தினத்தந்தி
|
24 Nov 2024 3:54 PM IST

தமிழ்நாட்டின் கல்வி கட்டமைப்பை அழிக்கக் கூடியது நீட் தேர்வு என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

சென்னை,

நீட் தேர்வு தேவையில்லை என்பதே அனைவரின் கருத்தாகவும் உள்ளது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"நாட்டில் இருக்கும் ஒரு சட்டத்திற்கு எதிர்கருத்துதான் சொல்ல முடியுமே தவிர, நாம் அதற்கு எதிரானவர்கள் கிடையாது. மத்திய அரசு நீட் தேர்வுக்கு சட்டம் கொண்டு வந்துவிட்டது. அந்த நீட் தேர்வு தேவையில்லை என்பதே முதல்-அமைச்சர், அமைச்சர்கள் உள்பட அனைவரின் கருத்தாகவும் உள்ளது.

தமிழ்நாட்டின் கல்வி கட்டமைப்பை அழிக்கக் கூடியது நீட் தேர்வு. 12-ம் வகுப்பு தேர்வில் கிடைக்கும் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களுக்கு மருத்துவ இடம் கொடுப்பதே நியாயமானது."

இவ்வாறு அப்பாவு தெரிவித்தார்.

மேலும் செய்திகள்