அஸ்வின் சாதனைகளை இந்த நாடு மறக்காது: ஜெயக்குமார்
|அஸ்வின் சாதனைகளை இந்த நாடு மறக்காது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இந்திய கிரிக்கெட் ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அஸ்வினின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அஸ்வின் ஓய்வு தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-
"சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் தனது ஓய்வை அறிவித்திருப்பது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கும், தமிழ் மண்ணிற்கும் வருத்தத்திற்குரிய நாளாக அமைந்துள்ளது. இளையவர் முதல் எளியவர் என புதியவர்கள் எவர் வந்தாலும் எல்லோரையும் சமமாக மதிக்கும் அவரது பெருந்தன்மையை பல இடங்களில் கவனித்திருக்கிறேன். தோனியின் வழியில் தனது ஓய்வை அறிவித்துள்ள அஸ்வினையும் அவரது சாதனைகளையும் இந்த நாடு மறக்காது! நன்றி அஸ்வின்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.