
நாகப்பட்டினம்
நாகை: அழுகிய நிலையில் கிடந்த பெண்ணின் எழும்புக் கூடு... அதிர்ச்சியில் மக்கள்

நாகை அருகே அழுகிய நிலையில் பெண்ணின் எழும்புக் கூடு கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாகை வேளாங்கன்னி பாலக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆடு, மாடுகளை மேய்க்க சென்ற போது வாய்க்கால் புதர் அருகே துர்நாற்றம் வீசியது. இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது அங்கு சோதனை நடத்தியதில் அடையாளம் தெரியாத ஒரு பெண்ணின் உடலானது அழுகிய நிலையில் எழும்புகூடு போல காணப்பட்டதை கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
முற்றிலும் உடல் அழுகி இருப்பதால் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அதே இடத்தில் உடல் கூராய்வு செய்யப்பட்டது. பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பெண்ணை கொலை செய்து விட்டு இங்கு உடலை வீசினார்களா? அல்லது இங்கு கடத்திவந்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண்ணின் சடலம் அருகே ஜெப மாலையும், ஒரு செருப்பும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சமிபத்தில் எதாவது பெண் காணாமல் போனாரா என அனைத்து காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பெண்ணின் அடையாளம் காணப்படவில்லை. மிகவும் அழுகிய நிலையில் கிடந்த பெண்ணின் எழுபுக்கூடு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.