< Back
மாநில செய்திகள்
நாகை-இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து ரத்து
மாநில செய்திகள்

நாகை-இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து ரத்து

தினத்தந்தி
|
14 Nov 2024 9:56 PM IST

மோசமான வானிலை காரணமாக நாகை-இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகை,

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் இடையே கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி சிவகங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கியது. போதிய பயணிகள் முன்பதிவு இல்லாததால், நாள்தோறும் நாகை துறைமுகத்திலிருந்து இயக்கப்படுவதாக இருந்த இந்த கப்பல் வாரத்தில் 3 நாட்கள் மட்டும் இயக்க முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, செவ்வாய், வியாழன், ஞாயிற்றுக்கிழமைகளில் கப்பல் போக்குவரத்து இருந்து வந்தது.

இதற்கிடையே பயணிகள் வருகை அதிகரித்து வருவதால் நவம்பர் 8-ம்தேதி முதல் வாரத்தில் செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு உள்ளிட்ட 5 நாட்கள் கப்பல் இயக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில், மோசமான வானிலை காரணமாக நாகை-இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

"2024-ம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி முதல் டிசம்பர் 18 ஆம் தேதி 2024 ஆம் ஆண்டு வரை வானிலை காரணமாக கப்பல் சேவை நிறுத்தப்படுவதற்கு முன்னதாக, நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன் துறைமுகம் ஆகிய இரு பகுதிகளிலும் பயணிகளின் வசதிக்காக எங்கள் சிவகங்கை கப்பல் 2024 நவம்பர் 15, 16, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். டிசம்பர் 18, 2024க்குப் பிறகு நாங்கள் சேவையை மீண்டும் தொடங்குவோம், திட்டங்களில் ஏதேனும் மாற்றம் இருந்தால் நாங்கள் உங்களுக்குத் தெரியப்படுத்துவோம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்