< Back
மாநில செய்திகள்
ஈரோடு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டி - சீமான் அறிவிப்பு
மாநில செய்திகள்

ஈரோடு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டி - சீமான் அறிவிப்பு

தினத்தந்தி
|
8 Jan 2025 4:35 AM IST

நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக சட்டப்பேரவையில் வெளியேறிய கவர்னரின் செயல் கண்டிக்கத்தக்கதாகும். தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலில் ஒலிக்கப்படும் என்பதும், இறுதியாகத்தான் தேசியகீதம் ஒலிக்கப்படவேண்டும் என்பதும் தமிழ்நாட்டில் நடைபெறும் ஒரு நிகழ்வாகும். அதை மாற்றியமைக்க கவர்னர் முயற்சி செய்வது தமிழ் இனத்தை அவமதிப்பதாக கருதப்படுகிறது. இதை தி.மு.க. தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ஆர்ப்பாட்டம் செய்து வருகிறது.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தலை கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் செய்தபோது, அனுமதியும், போராட இடமும் தரவில்லை. தடையை மீறியதால் எங்களை கைது செய்தனர். ஆனால், தி.மு.க. தன் அதிகாரத்தை பயன்படுத்திக்கொண்டு, தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. இதுதான் தமிழ்நாட்டில் தி.மு.க. கடைப்பிடிக்கக்கூடிய ஜனநாயகம்.

கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் அரசு பணத்தை வைத்து மூடிவிட்டது. டங்ஸ்டன் சுரங்கத்தை நாம் தமிழர் கட்சி இருக்கும் வரை எந்த கொம்பன் வந்தாலும் அந்த இடத்தில் ஒரு கல்லைக்கூட புரட்டிப்போட முடியாது. தமிழ் மண்ணின் வளத்தை காக்க மட்டுமே நாம் தமிழர் கட்சி இருக்கும். நிலத்தின் வளத்தை கெடுக்கும் எந்த ஒரு திட்டத்தையும் மண்ணில் வர விட மாட்டேன். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்