எனக்கு அரசியல் கற்றுக்கொடுத்தவர் முரசொலி செல்வம் - மு.க.ஸ்டாலின் பேச்சு
|முரசொலி செல்வம் பெயரில் விரைவில் அறக்கட்டளை தொடங்கப்படுமென முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை,
மறைந்த முரசொலி செல்வம் படத்திறப்பு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது;
"முரசொலி செல்வம் மறைந்த செய்தியை கேட்டு அதிர்ந்துவிட்டேன். என்னால் நம்பமுடியவில்லை. அவருக்கு எந்த உடல்நலக்குறைவும் கிடையாது. எங்களை எல்லாம் சோகத்தில் தவிக்கவிட்டு சென்றுவிட்டார். எனக்கு அரசியல் கற்றுக்கொடுத்தவர். மறைவதற்கு முன் முரசொலி செல்வம் என்னிடமும் பேசினார். முரசொலி செல்வம் மறைவுக்குப் பிறகு என் மனது உடைந்து சுக்குநூறாகிவிட்டது. அதிலிருந்து எப்படி மீள்வது என தெரியவில்லை.
முரசொலி செல்வம் பெயரில் விரைவில் அறக்கட்டளை தொடங்கப்படும். திராவிட இயக்கத்தை சேர்ந்த படைப்புகளுக்கும், படைப்பாளிகளுக்கும் ஆண்டுதோறும் பரிசுகள் வழங்கபடும். இந்த பரிசுகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தக்கூடிய திமுக முப்பெரும் விழாவில் வழங்குவது என முடிவு செய்திருக்கிறோம்."
இவ்வாறு அவர் பேசினார்.