மோடி மஸ்தான் வேலை என்னிடம் நடக்காது: விஜய் பேச்சு
|குடும்ப சுயநல கூட்டம் தான் நம்ம அடுத்த எதிரி என்று தவெக தலைவர் விஜய் கூறினார்.
விக்கிரவாண்டி,
தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் அக்கட்சித் தலைவர் விஜய் பேசியதாவது:-
என்கிட்ட இருக்குறதுலாம் உண்மை, உழைப்பு, நேர்மைதான்; உங்கள் விஜய்யா, உங்களை மட்டுமே நம்பி வந்திருக்கேன். இந்த கலர் அந்த கலர் பூசுவது என மோடி மஸ்தான் வேலையை செய்தாலும், ஒன்னும் நடக்கபோறது இல்லை யார் அரசியலுக்கு வந்தாலும் குறிப்பிட்ட சாயத்தை பூச சிலர் நினைக்கின்றனர்.
திராவிட மாடல்னு சொல்லிட்டு 'பெரியார், அண்ணா பெயரை சொல்லி, திராவிட மாடல் என்ற பெயரில் குடும்ப ஆட்சியை நடத்துகிறார்கள். மக்கள் விரோத ஆட்சியை நடத்தி விட்டு திராவிட மாடல் என ஏமாற்றுகிறார்கள். அவங்க பாசிசம்னா நீங்க என்ன பாயாசமா?. குடும்ப சுயநல கூட்டம் தான் நம்ம அடுத்த எதிரி. வீடு, உணவு, வேலை இவை மூன்றுமே அடிப்படை தேவை. இதை கொடுக்க முடியாத அரசு, இருந்தாலென்ன? இல்லாவிட்டாலென்ன?.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்; அதுதான் சமூக நீதிக்கான முதல் படியாக இருக்கும். என் (Career) கெரியர் உச்சத்தில் இருந்தபோதும், அந்த ஊதியத்தை உதறிவிட்டு உங்கள் விஜய்யா உங்களை மட்டுமே நம்பி வந்திருக்கேன். நம்மள பார்த்து யாரும் 'விசில் அடிச்சான் குஞ்சு' என சொல்லிடக் கூடாது. வேகமானவர்கள், விவேகமானவர்கள் என பாராட்டும் வகையில் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.