< Back
மாநில செய்திகள்
இளைய தலைமுறைக்கான பல்வேறு வாய்ப்புகளை மோடி அரசு வழங்குகிறது - எல்.முருகன்
மாநில செய்திகள்

'இளைய தலைமுறைக்கான பல்வேறு வாய்ப்புகளை மோடி அரசு வழங்குகிறது' - எல்.முருகன்

தினத்தந்தி
|
30 Oct 2024 2:50 AM IST

இளைய தலைமுறைக்கான பல்வேறு வாய்ப்புகளை மோடி அரசு வழங்குகிறது என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

நாடு முழுவதும் அரசு துறைகள் மற்றும் நிறுவனங்களுக்காக தேர்வு செய்யப்பட்ட 51,000 பேருக்கு பணி நியமண ஆணைகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. அதன்படி, சென்னை ஐ.சி.எப். அம்பேத்கர் கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அரசின் 6 துறைகளில் தேர்வு செய்யப்பட்ட 150 இளைஞர்களுக்கு, பணி நியமன ஆணைகளை மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை மந்திரி எல்.முருகன் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய எல்.முருகன், "புதிய இந்தியாவை உருவாக்குவதில் இளைஞர்களின் பங்கு அதிகரிக்க வேண்டும். இளைய தலைமுறைக்கான பல்வேறு வாய்ப்புகளை மோடி அரசு வழங்குகிறது. அரசு துறைகளில் மட்டுமின்றி, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், திறன் மேம்பாட்டிலும் இளைஞர்களுக்கு பிரதமர் மோடி பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கியுள்ளார்" என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்