< Back
மாநில செய்திகள்
சென்னையின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை
மாநில செய்திகள்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை

தினத்தந்தி
|
6 Nov 2024 8:53 PM IST

சென்னையின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

சென்னை,

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 12-ம் தேதி வரை பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை முதல் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்த நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. நுங்கம்பாக்கம், எழும்பூர், சென்ட்ரல், கீழ்ப்பாக்கம், கோடம்பாக்கம், வேப்பேரி, அரும்பாக்கம், திருவொற்றியூர், ராயபுரம், காசிமேடு, வியாசர்பாடி, மணலி வண்ணார்பேட்டை, பாரிமுனை, எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

கோயம்பேடு, அண்ணா நகர், கோடம்பாக்கம், வடபழனி, பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், சேலையூர், முடிச்சூர், பெருங்களத்தூர், செம்பாக்கம், மாடம்பாக்கம், வேங்கைவாசல், சித்தாலப்பாக்கம், மேடவாக்கம், செம்மஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

மேலும் செய்திகள்