< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
அரசு பணிக்கு தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் மு.க.ஸ்டாலின்
|8 Nov 2024 1:03 PM IST
அரசு பணிக்கு தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் வழங்கினார்.
சென்னை,
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த பொறியியல் சேவைகள் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் வழங்கினார்.
குடிநீர் வடிகால் வாரியம், பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஆகிய துறைகளில் உதவிப் பொறியாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 246 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 20 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர்கள் எ.வ.வேலு, செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.