< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்

புத்தாண்டையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற அமைச்சர்கள், எம்.பி.க்கள்

தினத்தந்தி
|
1 Jan 2025 1:01 PM IST

ஆங்கில புத்தாண்டையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அமைச்சர்கள், எம்.பி.க்கள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

சென்னை,

உலகம் முழுவதும் 2025 ஆங்கில புத்தாண்டு இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. ஆங்கில புத்தாண்டை மக்கள் உற்சாகமாக வரவேற்று கொண்டாடி வருகின்றனர். தமிழகம் முழுவதும் கோவில்களிலும், தேவாலயங்களிலிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த நிலையில் புத்தாண்டையொட்டி அமைச்சர்கள், எம்.பி.க்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அதன்படி ஆங்கில புத்தாண்டையொட்டி, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று முகாம் அலுவலகத்தில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, எஸ். ஜெகத்ரட்சகன், கனிமொழி, கலாநிதி வீராசாமி ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

மேலும் செய்திகள்