< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்ற பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த அமைச்சர் கோவி செழியன்
|23 Oct 2024 12:54 AM IST
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நேற்று 56-வது பட்டமளிப்பு விழா நடந்தது.
மதுரை,
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 56-வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு 54,714 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களுக்கான சான்றிதழ்களை வழங்கினார். இதற்கிடையே, தமிழக கவர்னர் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் சர்ச்சையானது.
இந்தநிலையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் புறக்கணித்தார்.மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், பல்கலைக்கழகங்களின் இணை வேந்தரான உயர்கல்வித்துறை அமைச்சர் இல்லாமல் தொடர்ந்து 3-வது முறையாக பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல, ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் பேராசிரியர் புஷ்பராஜ் பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தார்