< Back
மாநில செய்திகள்
அமலாக்கத்துறை சோதனை: அமைச்சர் துரைமுருகன் கூறியது என்ன?
மாநில செய்திகள்

அமலாக்கத்துறை சோதனை: அமைச்சர் துரைமுருகன் கூறியது என்ன?

தினத்தந்தி
|
3 Jan 2025 11:09 AM IST

அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.

சென்னை,

திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த். இவர் எம்.பி.யாக உள்ளார்.

துரைமுருகனும், அவரது மகன் கதிர் ஆனந்தும் குடும்பத்துடன் வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள காந்திநகரில் ஒரேவீட்டில் வசித்து வருகின்றனர்.

இதனிடையே, வேலூரில் உள்ள துரைமுருகன், கதிர் ஆனந்த் வீட்டில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது வேலூரில் திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசன் என்பவரது வீடு உள்ளிட்ட இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனையில் ரூ. 11 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அமலாக்கத்துறை தனியே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. தற்போது அந்த வழக்கு தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

இந்நிலையில், வேலூரில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில் சென்னையில் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் அமலாக்கத்துறை சோதனை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த துரைமுருகன், உங்களுக்கு எவ்வளவு விவரம் தெரியுமோ அவ்வளவுதான் எனக்கும் தெரியும். யார் வந்திருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியவில்லை. வீட்டில் யாரும் இல்லை. இரண்டு பணியாளர்கள் மட்டுமே இருக்கிறார்கள். அங்கு வந்திருப்பது எந்த துறை என்று தெரியவில்லை' என்றார்.

மேலும் செய்திகள்