< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கவர்னர் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
|20 Nov 2024 8:54 PM IST
கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்ற பட்டமளிப்பு விழாவை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்.
சென்னை,
சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரி வளாகத்தில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 24-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில், தமிழக கவர்னரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார்.
இந்த விழாவில் மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டிருந்தக்து. இந்த நிலையில், பட்டமளிப்பு விழாவை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார். அதோடு, துறை செயலாளர் சத்யபிரதா சாகுவும் விழாவில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.