< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரியில் லேசான நில அதிர்வு - ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவு
|9 Nov 2024 8:05 PM IST
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே திடீரென நில அதிர்வு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே இன்று மதியம் திடீரென லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நில அதிர்வு ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பிற்பகல் 1.32 மணியளவில் ஏற்பட்ட இந்த நில அதிர்வு பூமிக்கு அடியில் சுமார் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
இந்த நில அதிர்வின் தாக்கம் அரசம்பட்டி, பண்ணந்தூர், மஞ்சமேடு, பனங்காட்டூர், சந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டது. நில அதிர்வால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.