< Back
மாநில செய்திகள்
விடுமுறை கால அட்டவணையில் நாளை மெட்ரோ ரெயில்கள் இயக்கம்
மாநில செய்திகள்

விடுமுறை கால அட்டவணையில் நாளை மெட்ரோ ரெயில்கள் இயக்கம்

தினத்தந்தி
|
24 Dec 2024 4:06 PM IST

விடுமுறை கால அட்டவணையில் நாளை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை ,

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நாளை( டிசம்பர் 25 ) விடுமுறை கால அட்டவணையில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி , காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியிலும், இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியிலும், மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்