மெட்ரோ ரெயில் பணிகள்: அடையாறு பகுதியில் போக்குவரத்து மாற்றம்
|மெட்ரோ ரெயில் பணிகள் காரணமாக 2 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
சென்னை,
மெட்ரோ ரெயில் கட்டுமான பணி காரணமாக, சென்னை அடையாறு சந்திப்பு பகுதியில் நாளையும், நாளை மறுநாளும் (26, 27-ந்தேதிகளில்) சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. ஒருவழி சாலையாக இருந்த அடையாறு மேம்பாலம் இருவழி சாலையாக மாற்றப்பட்டுள்ளது.
சர்தார் வல்லபாய் படேல் சாலையில் இருந்து கிரீன்வேஸ் சாலை, மெரினா கடற்கரை மற்றும் மயிலாப்பூர் நோக்கி வரும் வாகனங்களும் மாற்றுப்பாதையில் விடப்படுகிறது. திரு.வி.க. பாலத்தில் இருந்து அடையாறு, திருவான்மியூர், பெசன்ட்நகர், ஓ.எம்.ஆர். மற்றும் மத்திய கைலாஷ் செல்லும் வாகனங்களுக்கு போக்குவரத்து மாற்றம் இல்லை.
பெசன்ட்நகரில் இருந்து கிரீன்வேஸ் சாலை, மெரினா கடற்கரை மற்றும் மயிலாப்பூர் செல்லும் வாகனங்கள் வழக்கம்போல செல்லலாம். அதேபோல சர்தார் வல்லபாய் படேல் சாலையில் இருந்து எல்.பி.ரோடு வழியாக அடையாறு, திருவான்மியூர், பெசன்ட்நகர் செல்லும் வாகனங்களுக்கும் மாற்றம் இல்லை.
மேற்கண்ட தகவல்களை போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.