< Back
மாநில செய்திகள்
மதுரை ரெயில்வே கோட்டத்தை திருவனந்தபுரம் தேர்வு வாரியத்தோடு இணைப்பது கண்டனத்திற்குரியது - எஸ்டிபிஐ

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

மதுரை ரெயில்வே கோட்டத்தை திருவனந்தபுரம் தேர்வு வாரியத்தோடு இணைப்பது கண்டனத்திற்குரியது - எஸ்டிபிஐ

தினத்தந்தி
|
25 Oct 2024 11:51 AM IST

திருவனந்தபுரம் தேர்வு வாரியத்தோடு மதுரை ரெயில்வே கோட்டத்தை இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி தெரிவித்துள்ளது.

சென்னை,

மதுரை ரெயில்வே கோட்டத்தை திருவனந்தபுரம் தேர்வு வாரியத்தோடு இணைக்கும் நடவடிக்கை கண்டனத்திற்குரியது என்று எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழகம் சார்ந்த மத்திய அரசுப் பணிகளில் தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் பல்வேறு வகைகளில் பறிக்கப்பட்டு வரும் சூழலில், தற்போது தென்தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்களின் ரெயில்வே வேலைவாய்ப்பை பறிக்கும் வகையில், மதுரை ரெயில்வே கோட்டத்தை திருவனந்தபுரம் ரெயில்வே தேர்வு வாரியத்துடன் இணைக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நடவடிக்கை கண்டனத்திற்குரியது.

மதுரை கோட்டத்திற்கு திருவனந்தபுரம் தேர்வு வாரியம் மூலம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்பது தமிழர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் சூழலை உருவாக்கிவிடும். ஆகவே, தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் வகையில் திருவனந்தபுரம் தேர்வு வாரியத்தோடு மதுரை ரெயில்வே கோட்டத்தை இணைப்பதை இந்திய ரெயில்வே நிர்வாகம் கைவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்