< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மயிலாடுதுறை: கூட்டுறவு சங்க விற்பனையாளர் பணிக்கான நேர்முக தேர்வு ஒத்திவைப்பு
|26 Nov 2024 6:53 PM IST
நாளை நடைபெற இருந்த நேர்முகத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது
சென்னை,
கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நாளை நடைபெற இருந்த கூட்டுறவுச் சங்க விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணிக்கான நேர்முகத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.டிசம்பர் 4 ஆம் தேதிக்கு இந்த நேர்முகத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 28 முதல் டிசம்பர் 3 வரை ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நேர்முகத் தேர்வு மாற்றமின்றி நடைபெறும் எனவும் மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாள விநாயகன் அமுல்ராஜ் அறிவித்துள்ளார்.