< Back
தமிழக செய்திகள்

தமிழக செய்திகள்
சர்ச்சை பேச்சு: மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மாற்றம்

28 Feb 2025 8:45 PM IST
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக மகாபாரதி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து இருந்தார்.
சென்னை,
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டரை மாற்றம் செய்து தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, மயிலாடுதுறை மாவட்டத்தின் புதிய கலெக்டராக எச்.எல்.ஸ்ரீகாந்த் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஈரோடு மாநகராட்சியின் ஆணையராக பணியாற்றி வந்தார்.
மயிலாடுதுறை கலெக்டராக செயல்பட்டு வந்த மகாபாரதி, சமீபத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார். அவரது பேச்சுக்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தன. இத்தகைய நிலையில், இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மகாபாரதியை காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.