< Back
மாநில செய்திகள்
சென்னையில் மாரத்தான் போட்டி:  25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
மாநில செய்திகள்

சென்னையில் மாரத்தான் போட்டி: 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

தினத்தந்தி
|
5 Jan 2025 9:54 AM IST

நான்கு பிரிவுகளில் மாரத்தான் போட்டிகள் நடைபெற்றன .

சென்னை,

சென்னை மாரத்தான் போட்டியின் 13வது சீசன் போட்டி இன்று நடைபெற்றது . பிரெஷ் ஒர்க்ஸ் இன்க், தி சென்னை ரன்னர்ஸ் ஆகியவை இணைந்து இந்த மாரத்தான் போட்டியை நடத்தின . முழு மாரத்தான் (42.195 கி.மீ), பெர்பெக்ட் 20 மைலர் - (32.186 கி.மீ), அரை மாரத்தான் (21.097 கி.மீ) மற்றும் 10 கி.மீ. ஓட்டம் என நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன .

நேப்பியர் பாலத்தில் இருந்து இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் வரை 42.195 கி.மீ, ஈ.சி.ஆர், நேப்பியர் பாலத்தில் இருந்து இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் வரை 32.186 கி.மீ, எலியட்ஸ் கடற்கரையில் இருந்து இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் வரை 21.097 கி.மீ, மற்றும் நேப்பியர் பாலத்திலிருந்து சிவானந்தா சாலை வரை 10 கி.மீ வரை போட்டிகள் நடைபெற்றன. அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய மாரத்தான் போட்டிகள் காலை 8 மணி அளவில் நிறைவடைந்தது. மாரத்தான் போட்டியில் 25,000-க்கும் அதிகமான ஓட்டப்பந்தய வீரர்களும், வீராங்கனைகளும் பங்கேற்றனர். தொடர்ந்து மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்ட்டது

மேலும் செய்திகள்