< Back
மாநில செய்திகள்
பராமரிப்பு பணி: சென்னை சென்டிரலில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மாற்று பாதையில் இயக்கம்
மாநில செய்திகள்

பராமரிப்பு பணி: சென்னை சென்டிரலில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மாற்று பாதையில் இயக்கம்

தினத்தந்தி
|
18 Nov 2024 5:45 AM IST

பராமரிப்பு பணி காரணமாக எக்ஸ்பிரஸ் ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது.

சென்னை,

சென்னை சென்டிரல் - அரக்கோணம் வழித்தடத்தில் பேசின்பிரிட்ஜ் - வியாசர்பாடி ஜீவா ரெயில் நிலையங்களுக்கு இடையே நாளை (செவ்வாய்க்கிழமை) மற்றும் 26-ந்தேதி இரவு 11.10 மணி முதல் காலை 6.40 வரை பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் சில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

* மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து இன்று (திங்கட்கிழமை) மற்றும் 25-ந்தேதி மாலை 4.45 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வழியாக கொச்சுவேலி செல்லும் அதிவிரைவு ரெயில் (வண்டி எண்.22645), சென்னை சென்டிரல் செல்லாமல் கொருக்குப்பேட்டை, வியாசர்பாடி ஜீவா, பெரம்பூர் வழியாக கொச்சுவேலி செல்லும். பெரம்பூரில் நின்று செல்லும்.

* ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து இன்று மற்றும் 25-ந்தேதி காலை 11.35 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வழியாக ஆலப்புழா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (13351), மறுமார்க்கமாக, ஆலப்புழாவில் இருந்து வரும் 21, 28 ஆகிய தேதிகளில் காலை 6 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வழியாக தன்பாத் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (13352), சென்னை சென்டிரல் செல்லாமல் கொருக்குப்பேட்டை, வியாசர்பாடி ஜீவா, பெரம்பூர் வழியாக செல்லும். பெரம்பூரில் நின்று செல்லும்.

* கொச்சுவேலியில் இருந்து நாளை மற்றும் 28-ந்தேதி காலை 6.15 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வழியாக சத்தீஷ்கார் மாநிலம் கோர்பா செல்லும் அதிவிரைவு ரெயில் (22648), சென்னை சென்டிரல் செல்லாமல் கொருக்குப்பேட்டை, வியாசர்பாடி ஜீவா, பெரம்பூர் வழியாக கோர்பா செல்லும். பெரம்பூரில் நின்று செல்லும்.

* பாலக்காட்டில் இருந்து வருகிற 19, 26-ந்தேதிகளில் மாலை 4.10 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் அதிவிரைவு ரெயில் (22652), திண்டுக்கல், விழுப்புரம் வழியாக சென்னை எழும்பூர் வந்தடையும். கூடுதலாக திருச்சி, செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் எழும்பூர் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது.

* ஈரோட்டில் இருந்து நாளை மற்றும் 26-ந்தேதி இரவு 9 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் (22650), சென்னை சென்டிரலுக்கு பதிலாக சென்னை கடற்கரையில் நிறுத்தப்படும்.

* பெங்களூருவில் இருந்து நாளை மற்றும் 26-ந்தேதி இரவு 10.40 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் சென்னை அதிவிரைவு மெயில் எக்ஸ்பிரஸ் ரெயில் (12658), சென்னை சென்டிரலுக்கு பதிலாக ஆவடியில் நிறுத்தப்படும்.

புறப்படும் நேரம் மாற்றம்

* சென்னை சென்டிரலில் இருந்து வருகிற 20, 27 ஆகிய தேதிகளில் காலை 6 மணிக்கு புறப்பட்டு மைசூரு செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் (12007), அதற்கு மாற்றாக சென்டிரலில் இருந்து காலை 6.45 மணிக்கு புறப்பட்டு மைசூர் செல்லும்.

* சென்னை சென்டிரலில் இருந்து வரும் 20, 27 ஆகிய தேதிகளில் காலை 6.10 மணிக்கு புறப்பட்டு கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12675), அதற்கு மாற்றாக சென்டிரலில் இருந்து காலை 6.50 மணிக்கு புறப்பட்டு கோவை செல்லும்.

* சென்னை சென்டிரலில் இருந்து வரும் 20, 27 ஆகிய தேதிகளில் காலை 6.25 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் (16057), அதற்கு மாற்றாக சென்டிரலில் இருந்து காலை 6.55 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்